00:00
05:58
வானம் கீழே வந்தால் என்ன
அட பூமி மேலே போனால் என்ன
மாயம் எல்லாம் மாயம்
இதில் மனிதன் நிலை என்ன
வாடா ராஜா வா வா
இதில் முதலும் முடிவென்ன
வானம் கீழே வந்தால் என்ன
அட பூமி மேலே போனால் என்ன ஹா
♪
இரவும் பகலும் எனக்கொரு மயக்கம்
இரவும் பகலும் எனக்கொரு மயக்கம்
நினைவும் மனமும் குதிரையில் பறக்கும்
ஊஞ்சல் போலே என் உள்ளம் ஆட
மேலும் மேலும் வேகம் கூட
மேலும் மேலும் வேகம் கூட
நானும் இங்கே காணும் இன்பம்
நிஜமோ நிழலோ கதையோ கனவோ
வானம் கீழே வந்தால் என்ன-அ-ஹ-ஹ-ஹா
பூமி மேலே போனால் என்ன
மாயம் எல்லாம் மாயம்
இதில் மனிதன் நிலை என்ன
வாடா ராஜா வா வா
இதில் முதலும் முடிவென்ன
வானம் கீழே வந்தால் என்ன
அட பூமி மேலே போனால் என்ன
♪
தர-தர-தார-தர-தர-தார-ரா
பறவை மிருகம் அழுவது இல்லை
பறவை மிருகம் அழுவது இல்லை
கவலை கடலில் விழுவது இல்லை
கண்ணீர் பூக்கள் என் வாழ்வில் இல்லை
நானும் கூட பறவை ஜாதி
நானும் கூட பறவை ஜாதி
பழகி பார்த்தால் தெரியுது சேதி
தினமும் மனம் போல் திரியும் குருவி
வானம் கீழே வந்தால் என்ன
அட பூமி மேலே போனால் என்ன
மாயம் எல்லாம் மாயம்
இதில் மனிதன் நிலை என்ன
வாடா ராஜா வா வா
இதில் முதலும் முடிவென்ன
வானம் கீழே-ஹே-ஹே-ஹே-வந்தால் என்ன
அட பூமி மேலே போனால் என்ன
♪
அடடா விழிமேல் அழகுகள் தெரிய
அடடா விழிமேல் அழகுகள் தெரிய
அருகில் இருந்தே அபிநயம் புரிய
பெண்ணோ பூவோ பொன் வெண்ணிலாவோ
ஆடை சூடும் வாடைக் காற்றோ
ஆடை சூடும் வாடைக் காற்றோ
மீண்டும் மீண்டும் தீண்டத் தீண்ட
இதமோ பதமோ இனிதோ புதிதோ
வானம் கீழே வந்தால் என்ன-ஹா-ஹா
பூமி மேலே போனால் என்ன
மாயம் எல்லாம் மாயம்
இதில் மனிதன் நிலை என்ன ஹா
வாடா ராஜா வா வா
இதில் முதலும் முடிவென்ன
வானம் கீழே வந்தால் என்ன
அட பூமி மேலே போனால் என்ன