00:00
03:23
காதல் கிளியே எந்தன் உயிரே
உந்தன் விழி அசைவிலே மயங்கினேன்
வந்தேனே ஆசை கனவோடு
தந்தேனே நீயும் உறவாடு
தடைகள் இனி இல்லையே
மாசி மாதம்
மாலை மாற்றிடுவேன்
காதல் கலைகள்
இரவில் பயின்றிடுவேன்
காதல் கிளியே எந்தன் உயிரே
காதல் கிளியே எந்தன் உயிரே
உந்தன் விழி அசைவிலே மயங்கினேன்
♪
வெண்ணிலவே உந்தன் புன்னகையா
அள்ளி சென்றிடவா இல்லை கொஞ்சவா
வண்ணக்கிளி எந்தன் நெஞ்சத்திலே
ஆசை மஞ்சத்திலே தஞ்சம் கொள்ளடி
ஆவலாய் வருவேனே
ஆலிங்கனம் செய்வேனே
முத்து மணிகளை
என்னுள் சேர்த்திடு
மாசி மாதம்
மாலை மாற்றிடுவேன்
காதல் ஓலை
நாளும் எழுதிடுவேன்
♪
உள்ளத்திலே
உன்னை கட்டி வைத்தேன்
கொஞ்சி முத்தமிட்டேன்
நீ தேனடி
மொத்தத்திலே
என்னை தந்துவிட்டேன்
உன்னை வென்றுவிட்டேன்
நாணம் ஏனடி
பருவமே ஒரு தொல்லை
அணை போடவும் வழி இல்லை
மனம் சேர்ந்தது
விழாவானது
மாசி மாதம்
மாலை மாற்றிடுவேன்
காலம் முழுதும்
என்னை தந்திடுவேன்